மற்றோருக்கு மொழி , எமக்கது வழி
பல் மொழி வித்தகனாம் ஒருவன் , தாய் மொழி தவிர
பிழையா ? என்றான் ஒருவன்.
யாராரோ உற்றவராம்
ஆராரோ சொன்ன பெற்றவள் மட்டும் இல்லையாம் , குறையா ?
கேட்டேன் நான்
„யாதும் ஊரே யாவரும் கேளிர்“ பாடியவர் தம் தமிழ் புலவர் என்றானவன்
பாரெல்லாம் ஊர் ; ஊரெல்லாம் உறவு , தமிழ் பெருமகனார் சொன்னது பொய்யில்லை . ஆனால் தாய்மொழி ஊரல்ல...உறவல்ல ..உயிரல்லவோ ?
ஊரது இலையாய் இருக்க உறவதன் கிளையாய் இருக்க , தாய்மொழி வேர் போன்றது என்றேன் நான்
வேருக்கு நீரூற்றுவோம்!!!
அனைவருக்கும் எமது உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment