Wednesday, August 12, 2009

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

நினைவுகள் உணவானது
கனவுகள் நீரானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

சத்தம் சங்கீதமானது
இரைச்சல் இசையானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

வானவில் சாயம் போனது
வெண்ணிலா வண்ணம் கொண்டது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

தாய் பாசம் பொய்யானது
என் காதல் மெய்யானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

இழப்பு இன்பமானது
தோல்வி சுகமானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

குறை பைத்தியம் நிறையானது
அறிவு அர்த்தம் இழந்தது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

காமம்

A subtle but a strong stuff I came across in a magazine :)

வெட்கம் அவிழ்! மிருகம் நீ!
உடல் முழுவதும் கீறல் செய்!
ஆடை கலை ! ஆண்மை பருகு!
மோக முல்லை கொண்டு முகத்தில் கோலாமிடு!

வியர்வை சுவைத்து சுவைத்து உதடுகள் கருத்து போக வேண்டும்
தேகங்கள் குடைந்து குடைந்து சுகங்களை பிழிந்து எடுக்க வேண்டும்
எச்சில் கொண்டு சதை ஏடுகளில் சுயசரிதை எழுத வேண்டும்

பித்த நாலங்களில் ரத்தம் சூடேரி யுத்தம் நடத்த வேண்டும்!
காதல் பொய் ! கடவுள் பொய் !
உறவும் பொய் ! நட்பும் பொய் !
உண்மை தெளியும் அந்த உச்ச நொடிகள் மீண்டும் வேண்டும்!