Monday, May 4, 2009

நான் ரசித்த கடிதம்

அன்பே உனக்கொரு கடிதம்,

எனக்கு உன் மேல் உள்ள காதலை ஆயிரம் முறை வார்த்தைகளில் நனைத்து உனக்கு அஞ்சலியாக்கி விட்டேன்.. உனது உணர்வை நானும் எனது உணர்வை நீயும் வார்த்தை இன்றி அடையாளம் கண்டு கொள்ளும் உன்னதத்தை நம் காதல் எய்தி விட்ட பின் வார்த்தைகள் அர்த்தமற்று போனது.

இனி என் கடிதங்கள் வெற்று காகிதங்களாக உனை வந்தடைந்தாலும் என் நிலை அறியும் திறன் உனக்குண்டு. நானறிவேன்.

பின் ஏன் இந்த கடிதம்?

நம்முறவின் உன்னதம் உலகுக்கு புரியாமல் அது ஊமையாக  மாண்டு விட கூடாது என்பதற்க்காக . நாளை மரணம் நம்மை பூஜைக்குரியவர்களாக ஆக்கி விட்ட் பின், நமது சரிதையின் உயிர்ச்சான்றுககலாக இக்காகிதங்கள்  வாழும். இன்று நம்முறவுக்கு  கண்டனம் சொல்லும் சமுதாயம், நாளை நமக்கு பின் நமது கால் துகள்களை கூட பத்திரப்படுத்த முற்படும்...அப்போது இக்காகிதங்கள்  அவர்களுக்கு பொக்கிஷமாகும்.

எனவே, காதலி! இக்காகிதத்தை  பத்திர படுத்தி வை. இன்றைய விமர்சனங்களில் சிக்கி சிதைந்து விடாமல் பாதுகாத்து வை. காதலுக்கும்,அன்புக்கும்,வெறுப்புக்கும் வித்தியாசம் இம்மி அளவே என்பதை இன்று நாம் உணர்ந்ததை நாளை அவர்கள் புரிந்து கொள்ளும் வரை வெறும் பரிச்சியம்  என்ற இடரக்கடலின் நிழலில் நம் காதல் வாழட்டும்.நேற்றைய புரட்சி காரர்களின் திருட்டு கவிதைகள் இன்றைய தேசிய கீதங்கள் ஆவது போல்...நாளை நம்  காதலும்!!


பல நாட்களுக்கு பிறகு....

சரியாக சொன்னால்  இருபது ஆண்டுகளுக்கு பிறகு...மீண்டும் உனக்கொரு கடிதம்....உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற காரணத்தினால்  என்னவோ உனது விலாசத்தை விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்....

காதலி! மீண்டும் உனக்கொரு கடிதம், நான் முன்பு எழுதிய கடிதம் உனக்கல்ல.எனினும் இத்துடன் அதையும்  இணைத்துள்ளேன்,.

காதல், ரிஷிகளின் மூலம் பார்ப்பது அனசாரமாகாது. பழைய  கடிதத்தின் சொந்த காரியிடம் இந்த கடிதத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவளுக்கு ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை...

காதல் மாறாதது  என்பது உண்மை... ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும்...... காதல் மாறுவதில்லை....

கூடி வாழ்வதும்,காதலில் கூடுவதும்.... இரு வேறு நிலைகள்...

அவள் என்னவள், அவன் என்னவன் என அறம் என்ற பெயரால் அடையாள சூடு வைக்கும் மிருகதனம் மனிதனுக்கே உரித்தானது.

No comments: