Wednesday, January 3, 2018

                                   இள நிலை காதல் 





கடல் அலைகள் கரைக்கு சொன்ன ரகசியம் என்ன
பௌர்ணமிகள் பிறைக்கு சொன்ன ரகசியம் என்ன


அலைமோதும் எண்ணங்கள் மூச்சு முட்ட
கண் காண இடம் தனிலே கனவு நிற்க
இதழ்கள் பிளந்து கதைகள் பேசி
நிலவின் மடியில் இரவு முழுதும்
விதியாய் விடையாய் விழியன் துளியில் நீயும் நானும் !

                                                                                        (கடல் அலைகள் .....)

சாரல் மழையை வேர்கள் பருக
சேரும் பொழுதில் உயிர்கள் உருக
புவியின் விளிம்பு இதுவென கொண்டு
மரிக்கும் நொடியை மதியால் வென்று

நிலையாய் நினைவாய் கவிதை வரியாய் தொடரும் உறவு

                                                                                            (கடல் அலைகள் ...)