Saturday, September 16, 2017

கனவு களைவோம் காதல் வளர்ப்போம்


நீங்கள் விடை பெறும் போது துளிர்க்கும் கண்ணீர் நிறுத்தி
நான் பிரியும் போது அரும்பும் ஏக்கம் கலைத்து
பிரிவின் ஆணவத்தைஅடக்குவோம்!

நீங்கள் கொடுத்த பேனா தொலையும் போதும்
நான் கொடுத்த கடிதம் கிழியும் போதும்
கிழிவதும் தொலைவதும் வெறும் பொருளென தெளிவோம்!

உங்கள் பேச்சில் நான் மயங்கும் போதும்
என் சிரிப்பில் நீங்கள் உருகும் போதும்
நீள்வது காதல் அல்ல வெறும் நேரம்  என உணர்வோம்!

உங்களுக்கு பிடித்த புடவை நான் அணிவது
எனக்கு பிடித்த சட்டை நீங்கள் அணிவது
அன்பின் எழுமை அன்றி முட்டாள்தணத்தின் முழுமை என புரிவோம்!


உங்கள் பார்வையால் ஏற்படும் கிளர்ச்சியும்
என் வெட்கத்தால் துளிர்க்கும் சிலிர்பும்
காதல் வேதங்கள் இன்றி வெறும்தேக தாகங்கள் என தெளிவோம்!